நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 April 2022 1:01 AM IST (Updated: 26 April 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் விஷ்ணு தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

நாங்குநேரி அருகே சிங்கிகுளம் இந்திரா நகரைச் சேர்ந்த விவசாயி முருகன் (வயது 67), கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை திடீரென்று தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

போலீசார் மீட்டனர்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக்னஸ் பொன்மணி, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, முருகனிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி, அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் அவரை கலெக்டரிடம் மனு கொடுக்க செய்தனர்.

அந்த மனுவில், ‘‘சிங்கிகுளம் இந்திராநகர் தெற்கு தெருவில் 50 வீடுகள் உள்ளன. மெயின் ரோட்டில் இருந்து அந்த தெருவிற்கு செல்லும் பாதையை தனிநபர் அடைத்து வைத்திருந்தார். பின்னர் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
இந்த நிலையில் அந்த நபர் மீண்டும் பாதையை அடைத்து விட்டார். இதனால் தெற்கு தெருவுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து தாசில்தார் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று தெரிவித்து இருந்தார்.

மயங்கி விழுந்த பெண்

அம்பை அருகே கோவில்குளத்தைச் சேர்ந்த மகேசுவரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தபோது, வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் விரைந்து சென்று, மகேசுவரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

மேலும், மானூர் பகுதியைச் சேர்ந்த வீரம்மாள், கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அவரது உடமைகளை போலீசார் சோதனை செய்தபோது, மருந்து பாட்டில் இருந்தது. இதையடுத்து மருந்து பாட்டிலை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை கலெக்டரிடம் மனு கொடுக்க செய்தனர்.

Next Story