கட்டங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
கட்டங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஒன்றியம் கட்டங்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஊராட்சியில் உள்ள நூலகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அங்கு எழுதப்பட்டுள்ள கல்வி ஒன்றுதான் உண்மையான வளர்ச்சி தரும் என்ற வாசகம் என்னை கவர்ந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் திட்ட இயக்குனர் திலகவதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் உத்தண்டராமன், உதவி இயக்குனர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் காஜா மைதீன்பந்தே நவாஸ், கட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர், கட்டங்குடி ஊராட்சி பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story