51 வார்டுகளிலும் சீமைக்கருவேல மரங்களை இலவசமாக அகற்ற குழுக்கள் அமைப்பு


51 வார்டுகளிலும் சீமைக்கருவேல மரங்களை இலவசமாக அகற்ற குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 26 April 2022 1:08 AM IST (Updated: 26 April 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகளிலும் சீமைக்கருவேல மரங்களை இலவசமாக அகற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகளிலும் சீமைக்கருவேல மரங்களை இலவசமாக அகற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறினார்.
மாநகராட்சி சுடுகாடு
தஞ்சை மாநகராட்சி பகுதியில் சாந்திவனம், ராஜாகோரி, மாரிகுளம் ஆகிய 3 சுடுகாடுகள் உள்ளன. இந்த சுடுகாட்டில் மாநகராட்சி பகுதி மட்டும் அல்லாது, அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளிலும் இறந்தவர்களின் உடல்களை கொண்டு வந்து அடக்கம், மற்றும் தகனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை இலவசமாக தகனம் செய்ய மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி முதன் முதலாக சாந்திவனம் சுடுகாட்டில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு இலவசமாக உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 2 சுடுகாட்டில் அமல்
இந்த நிலையில் தஞ்சை ராஜாகோரி சுடுகாடு மற்றும் மாரிகுளம் சுடுகாட்டில் நேற்று முதல் உடல்களை கட்டணம் இல்லாமல் தகனம் செய்யும் முறை தொடங்கி வைக்ககப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். மேலும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை தடுக்கும் வகையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதில் மண்டலக்குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யாசரவணன், கவுன்சிலர்கள் ஆக்னஸ்மேரி, கண்ணுக்கினியான், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மேலாளர் கிளமெண்ட் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
மேயர் பேட்டி
பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாநகராட்சியில் உள்ள 3 சுடுகாட்டிலும் மோக்‌ஷத்ரா அமைப்புடன் சேர்ந்து உடல்களை தகனம் செய்ய கட்டணம் இல்லா மறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை மாநகராட்சியில் செயல்பாட்டுக்கு வந்தது. இதே போல் உடல் அடக்கம் செய்வதாக இருந்தாலும், உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்து வந்தால் போதும். உடல்கள் கட்டணம் இல்லாமல் அடக்கம் செய்யப்படும்.
சீமைக்கருவேல மரங்கள்
சமூக நல்லிணக்கத்தோடு இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் 3 சுடுகாடுகளும் இனி நந்தவனம் போல செயல்டுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளிலும் நிலத்தடி நீரை உறிஞ்சும் வகையில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அழிக்கப்படுகிறது.
இதற்காக வையம் மற்றும் பொய்கை அறக்கட்டளை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இலவசமாக சீமைக்கருவேல மரங்களை அகற்ற உள்ளனர். முதல் கட்டமாக 6-வது வார்டில் உள்ள ராஜாகோரி சுடுகாட்டில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து வார்டுகளிலும் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story