இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பேரணி
சாத்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
சாத்தூர்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்சி நோக்கி 4 முனை சைக்கிள் பேரணி தொடங்கியது. கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி நேற்று சாத்தூர் வந்தடைந்தது. அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சாலை போக்குவரத்து தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நகர சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சாத்தூர் நகர சேர்மன் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். சைக்கிள் பேரணியில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் திருச்சியை நோக்கி புறப்பட்டு சென்றனர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
Related Tags :
Next Story