ஆன்லைன் மோசடி; ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் மீட்பு

திருச்சி, ஏப்.26-
திருச்சி பொன்மலைப்பட்டி அமுல் நகரை சேர்ந்தவர் சதீஷ். இவர் இன்ஸ்டாகிராமில் வந்த நகை விளம்பரத்தை பார்த்து ரூ.80 ஆயிரத்துக்கு நகை ஆர்டர் செய்து, அதில் உள்ள வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் ஆர்டர் செய்த நகை வந்து சேரவில்லை. திருச்சி தென்னூர் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் நேஷா. இவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஐ-போன் வாங்குவதற்காக ரூ.3 ஆயிரத்தை கட்டியுள்ளார். ஆனால் அவருக்கு செல்போன் வந்து சேரவில்லை. திருச்சி உய்யகொண்டான்திருமலை சண்முகாநகரை சேர்ந்த ராகவேந்தர் ஆன்லைன் மூலமாக ரூ.58 ஆயிரத்து 49-க்கு செல்போன் ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அந்த ஆர்டரை ரத்து செய்து விட்டார். ஆனால் அவருக்கு ரூ.100 மட்டுமே திரும்ப கிடைத்தது. மீதி பணம் ரூ.57 ஆயிரத்து 949 வரவில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட 3 பேரும் தங்களது பணத்தை மீட்டுத்தரக்கோரியும் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முறைகேடாக பண பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து சைபர்கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட வங்கியின் சட்டபிரிவுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுத்ததின் பேரில், புகார்தாரர்களின் பணம் மீட்கப்பட்டு வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் திரும்ப சேர்க்கப்பட்டது. இதுபோல் ஆன்லைனில் வரும் தகவல்களை நம்பி வங்கி கணக்கை யாரிடமும் பகிர்ந்து ஏமாற வேண்டாம் என்றும், யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனடியாக சைபர்கிரைம் அவசர உதவி எண் 1930 தொலைபேசி எண்ணில் விரைவாக தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும், மேலும் ஆன்லைன் பணமோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Related Tags :
Next Story