மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2022 1:53 AM IST (Updated: 26 April 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஏப்.26-
தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு.மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வீடு, கணினி, வாகனம், கல்வி கடன்கள், பஞ்சப்படி உள்பட சலுகைகளை வழங்க மறுக்கும் வாரிய ஆணை எண் 2-ஐ ரத்து செய்ய வேண்டும். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். புதிய பதவிகளை அனுமதிக்காமல் மறுபகிர்வு முறையை தடுத்திடவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story