பிளஸ்-1 மாணவியை மறுதிருமணம் செய்த இளம்பெண்
கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் அவரது மனைவியான இளம்பெண், ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை மறுதிருமணம் செய்ததுடன் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சியை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலூர்,
கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் அவரது மனைவியான இளம்பெண், ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை மறுதிருமணம் செய்ததுடன் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சியை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
நகை மாயம்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மேலூரில் தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் வீட்டில் இருந்த 10 பவுன் நகை காணாமல் போய்விட்டது. நகை மாயமானது குறித்து அந்த சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த சிறுமியிடம் விலை உயர்ந்த செல்போன் ஒன்று இருப்பதை பார்த்த அவருடைய குடும்பத்தினர், இந்த செல்போனை யார் கொடுத்தது என கேட்டுள்ளனர்.
அப்போது, ஒரு இளம்பெண்ணின் பெயரை ஆணாக மாற்றி அந்த சிறுமி கூறவே சந்தேகம் அடைந்து, அந்த செல்போனை குடும்பத்தினர் சோதித்து உள்ளனர்.
அதிர்ச்சி
அந்த செல்போனில் இளம்பெண் ஒருவரும் இந்த சிறுமியும் கணவன்-மனைவியாக இருப்பது போன்ற நெருக்கமான படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அந்த சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பி்ன்னர் இதுகுறித்து மேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் ரமாராணி விசாரணை நடத்தினார். இதில், மேலூர் அருகே உள்ள மற்றொரு ஊரைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது. இவர்கள் திருமணம் ஆனவர்கள். அவர்களுடைய கணவர்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், தாயாருடன் வசித்து வந்துள்ளனர்.
அந்த இரட்டை சகோதரிகளில் ஒருவர், மேலூரில் அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார். அப்போது 17 வயது சிறுமி அந்த கடைக்கு சென்ற போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடையில் காதல் வயப்பட்டனர். பின்னர் ஆசைவார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி, நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
திருமணம்
ஜவுளிக்கடையில் வேலைபார்த்த பெண், ஓரின சேர்க்கைக்காக அந்த சிறுமியை மறுதிருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.் சிறுமியை திருமணம் செய்தது மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் ஜவுளிக்கடையில் வேலைபார்த்த பெண்ணின் செல்போனில் இருந்துள்ளன.
எனவே போக்சோ மற்றும் குழந்தைத் திருமண தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த ஜவுளிக்கடை பெண் ஊழியரையும், உடந்தையாக இருந்த அவரது சகோதரிையும் கைது செய்த போலீசார், மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சிறையில் அடைப்பு
சகோதரிகள் இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story