அரசியல் சட்டத்தை மீறி கவர்னர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது
அரசியல் சட்டத்தை மீறி கவர்னர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று பழ.நெடுமாறன் கூறினார்.
ஜெயங்கொண்டம்:
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக கவர்னர் தன்னிச்சையாக நடத்தும் மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் அழைக்கப்படவில்லை. இதிலிருந்து தமிழக அரசுக்கும், இந்த மாநாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிகிறது. கவர்னர் அரசியல் சட்டத்தை மீறி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்சே சகோதரர்களை ஆட்சி பீடத்தில் உட்கார வைத்த அதே சிங்கள மக்கள், தற்போது அவர்களை பதவிகளில் இருந்து வெளியேற வேண்டும் என வற்புறுத்துகின்றனர், என்றார்.
Related Tags :
Next Story