‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 April 2022 6:33 PM IST (Updated: 26 April 2022 6:33 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாய்ந்து கிடக்கும் வழிகாட்டி பலகை
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் மாவு மில் அருகில் புளியம்பட்டி விலக்கில் மறுகால்தலை ஊருக்கு செல்லும் வழிகாட்டி பலகையானது யாரும் கேட்பாரற்று வெகு நாட்களாக சாலைேயாரம் சாய்ந்து கிடக்கிறது. இதனால் வெளியூர் வாகன ஓட்டிகள் ஊர் தெரியாமல் தேடி அலைகின்றனர். எனவே, பலகையை சரிசெய்து வழிகாட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
மாடசாமி, நெல்லை.

நாய் தொல்லை
பாளையங்கோட்ைட கோட்டூர் பஜனை மடம் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவில் மக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, நாய்களை பிடித்துச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்தி, கோட்டூர்.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
ராதாபுரம் தாலுகா கூத்தன்குழி- விஜயாபதி வழியாக கன்னியாகுமரி- தூத்துக்குடிக்கு (தடம் எண் 572) அரசு பஸ் இயங்கி வந்தது. இந்த பஸ் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் குறிப்பாக சென்னைக்கு ரெயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கன்னியாகுமரிக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அந்த பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

வேகத்தடை அவசியம்
நெல்லை பேட்டையை அடுத்த நடுக்கல்லூரில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 700 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கூடம் வரும் மாணவிகள், சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பள்ளிக்கூடத்தின் முன்புறம் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சித்திரைவேல், நடுக்கல்லூர்.

பஸ் வசதி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கரை கிராமத்தில் இருந்து உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்காக சுமார் 100 மாணவர்கள் அருகில் உள்ள பண்பொழி கிராமத்துக்கு சென்று வருகின்றனர். காலை 8 மணிக்கு மேக்கரையில் இருந்து பண்பொழி செல்வதற்கு அரசு பஸ் வசதி உள்ளது. அதேபோல் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பண்பொழியில் இருந்து மேக்கரைக்கு மாலை நேரத்திலும் அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தியாராஜன், மேக்கரை.

குண்டும் குழியுமான சாலை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா இளம்புவனம் ஊராட்சி கன்னியம்மன் கோவில் தெருவில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கியதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
செல்லையா, இளம்புவனம்.

அரசு ஆஸ்பத்திரி அமையுமா?
நாசரேத் பேரூராட்சியில் பள்ளி, கல்லூரிகள் அதிகம் உள்ளன. மக்கள் தொகையும் அதிகம் கொண்ட ஊராகும். இந்த ஊரைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்களும் உள்ளன. ஆனால், இங்கு அவசர சிகிச்சைக்கு அரசு மருத்துவமனை இல்லை. மருத்துவ சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அல்லது நெல்லைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிப்படுவதுடன், சில சமயங்களில் கால விரயத்தால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, நாசரேத்தில் அரசு ஆஸ்பத்திரி வசதி செய்து கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஈஸ்டர் ராஜ், பிள்ளையன்மனை. 

பழுதடைந்த அடிபம்பு

ேகாவில்பட்டி நகராட்சி 10-வது வார்டு காளியப்பர் தெருவில் அடிபம்பு பழுதடைந்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடக்கிறது. பராமரிப்பு செய்யப்படாமல் இருப்பதால் அதன் அருகே குப்பைகளும் கொட்டப்படுகிறது. எனவே, அடிபம்பை பழுது நீக்கி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.

செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
புதுக்கோட்டை திருமண மண்டபம் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த நிலையம் கடந்த 1½ ஆண்டுகளாக செயல்படவில்லை. எனவே, இதனை சரிசெய்து மக்களுக்கு குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராமன், புதுக்கோட்டை.

Next Story