கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தை


கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தை
x
தினத்தந்தி 26 April 2022 7:13 PM IST (Updated: 26 April 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச்சென்றது.

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் புதூர் பகுதியில் அமைந்துள்ள முருகன் என்பவர் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்தபடி இருந்துள்ளது. திடீரென நாயின் சத்தம் நிற்கவே, சந்தேகமடைந்த முருகன் ஜன்னல் வழியாக வீட்டின் வெளியே பார்த்தபோது வாசலில் இரத்தமாக இருப்பதைத் கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதித்து பார்த்தாா். அப்போது குடியிருப்புக்குள் சிறுத்தைப் புகுந்து வளர்ப்பு நாயைக் கவ்விச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து அவர் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் கோத்தகிரி வனத்துறையினர் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில், குடியிருப்புப் பகுதிக்குள் உலாவரும் சிறுத்தையால் அச்சம் அடைந்து உள்ேளாம். எனவே மனிதர்களை தாக்குவதற்குள் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்,


Next Story