ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2022 8:52 PM IST (Updated: 26 April 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் மோகன்தாஸ், மாவட்ட செயலாளர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், நிர்வாகிகள் சுடலைமுத்து, ஜெயபாலகிருஷ்ணன், முத்துராஜ், பாலகிருஷ்ணன், மாரிமுத்து மற்றும் ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியன் பாண்டியனிடம் கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story