வீட்டின் சுவரில் முட்டியதில் காயமடைந்த போலீஸ்காரர் சாவு


வீட்டின் சுவரில் முட்டியதில் காயமடைந்த போலீஸ்காரர் சாவு
x
தினத்தந்தி 26 April 2022 9:12 PM IST (Updated: 26 April 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் அருகே வீட்டின் சுவரில் முட்டியதில் காயமடைந்த போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

கயத்தாறு:
கடம்பூர் அருகே உள்ள ஓனமாக்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் வெங்கடேஷ் (வயது 35). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஆயுதப்படை போலீஸ்காரராக சிவகாசியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சில பிரச்சினை காரணமாக 2009-ம் ஆண்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அன்று முதல் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் சிவகாசியில் உள்ள தனது தங்கை வீட்டில் தங்கியிருந்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

சமீபத்தில் வெங்கடேஷ் தனது சொந்த ஊரான ஓனமாக்குளம் கிராமத்துக்கு வந்து தந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் சுவரிலும், கட்டிலிலும் முட்டியதில் காயம் அடைந்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story