மும்பையில் கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியது
மும்பையில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து 100-ஐ தாண்டியது.
மும்பை,
மும்பையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது. இந்தநிலையில் நகரில் தொற்று பாதிப்பு 100-ஐ தாண்டியது. மும்பையில் புதிதாக 102 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இது கடந்த பிப்ரவரி 27-ந் தேதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச பாதிப்பு ஆகும். அதே நேரத்தில் நகரில் தொற்று நோய்க்கு புதிய உயிரிழப்பு எதுவும் இல்லை.
மும்பையில் இதுவரை 10 லட்சத்து 59 ஆயிரத்து 433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 322 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 549 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 19 ஆயிரத்து 562 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 9 ஆயிரத்து 515 நாட்களாக உள்ளது.
Related Tags :
Next Story