கிராமங்கள் வாரியாக கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்த அறிவுரை
கிராமங்கள் வாரியாக கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்த அறிவுரை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்
கிராமங்கள் வாரியாக கொேரானா தடுப்பூசி அனைவரும்செலுத்த அறிவுரை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள், வருவாய்த்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.
கொரோனா பரவல் சென்னையில் அதிகரித்து வருவதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள கிராமங்கள் வாரியாக உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்
இதற்காக முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் விவரம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் விவரம், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் விவரம் ஆகியவற்றை பட்டியலிட்டு அவர்களை தடுப்பூசி செலுத்துவதற்கு நினைவூட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
முககவம் அனைவரும் அணிந்து வீதியில் நடமாட வேண்டும். பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story