விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த சாமியாடி குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் வேலு (வயது 42). தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தை இல்லை.
இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேலு, மனமுடைந்து விஷத்தை எடுத்து குடித்தார். இதையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story