விவசாய தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2022 10:03 PM IST (Updated: 26 April 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி தமிழக விவசாய தொழிலாளர்கள் கட்சி சார்பில் மயிலாடுதுறை மகாதானத் தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை
 தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி தமிழக விவசாய தொழிலாளர்கள் கட்சி சார்பில் மயிலாடுதுறை மகாதானத் தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தலைவர் தனபால்  முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சிவக்குமார் வரவேற்று பேசினார். இதில் கட்சியின் நிறுவன தலைவரும், தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன்.குமார் கலந்துகொண்டு பேசினார். முதல்-அமைச்சர் அனுமதியின்றியும், உயர் கல்வித்துறை அமைச்சரை அழைக்காமலும் ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டம் நடத்தும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின்னர், பொன்.குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மாநில அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை மத்திய அரசுக்கு அனுப்புவது தான் கவர்னரின் பணி. ஆனால், இல்லாத அதிகாரத்தை அவர் கையில் எடுத்துக்கொண்டு தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடத்துகிறார். அவரை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகவீரபாண்டியன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெகமுருகன், மாநில பொருளாளர் ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் கல்யாணம் கலந்து கொண்டு பேசினார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story