கல்வராயன்மலையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கச்சிராயப்பாளையம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் குரும்பலூர் வனப்பகுதியில் மர்ம நபர்கள் சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் குறும்பாலூர் வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 பேரல்களில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story