அணையில் மூழ்கி தந்தை- மகன் பலி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 April 2022 10:54 PM IST (Updated: 26 April 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

அணையில் மூழ்கி தந்தை மகன் பலியானார்கள்.

மும்பை,
ஜல்னா எம்.ஐ.டி.சி. பகுதியை சேர்ந்தவர் மாலிக் நிர்வால். இவர் நேற்று தனது 3 மகன்களுடன் அங்குள்ள மோதி அணைக்கு குளிக்க சென்றார். அவர்கள் அணையில் இறங்கி குளித்தபோது மகன்களில் ஒருவரான ஆகாஷ் தண்ணீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலிக் நிர்வால் மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார். இருவரும் வெளியே வரவில்லை. இதை கண்ட மற்ற 2 மகன்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால் தந்தை- மகன் 2 பேரையும் பிணமாக தான் மீட்க முடிந்தது. 
 இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story