மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசாா கைது செய்தனர்.
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சியை சேர்ந்தவர் ஆன்றோ கியூபர்ட் (வயது20). மின்வாரிய ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆன்றோ கியூபர்ட் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபரை தேடி வந்தனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் உருவம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை திருடியதாக இரணியல் அருகே உள்ள பேயன்குழியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். அந்த சிறுவன் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மோகத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சிறுவனக்கு வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உண்டா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story