இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகளாக அறிவிப்பு
வேலூர் கோட்டை பூங்காவில் வைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்று வேலூர் மகிளா கோர்ட்டு மாஜிஸ்திரேட் அறிவித்தார்.
வேலூர்
வேலூர் கோட்டை பூங்காவில் வைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்று வேலூர் மகிளா கோர்ட்டு மாஜிஸ்திரேட் அறிவித்தார்.
இளம்பெண் பாலியல் பலாத்காரம்
வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கடந்த 2020-ம் ஆண்டு வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இளம்பெண்ணும், அதே கடையில் பணிபுரிந்த காட்பாடியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர். காதல்ஜோடியினர் ஜனவரி மாதம் 18-ந் தேதி ஜவுளிக்கடையில் வேலை முடிந்த பின்னர் இரவில் கோட்டை பூங்காவிற்கு சென்று அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
இரவுநேரத்தில் காதல்ஜோடியினர் தனியாக இருப்பதை அறிந்த 3 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணிடம் அத்துமீறினர். அதனை தடுத்த காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள், இருவரிடமும் இருந்த செல்போன், பணம் மற்றும் இளம்பெண் அணிந்த கம்மலை பறித்தனர். தொடர்ந்து 3 பேரும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார்கள்.
3 பேரும் குற்றவாளிகள்
இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன் (வயது 41), வசந்தபுரத்தை சேர்ந்த சக்தி (21), தொரப்பாடியை சேர்ந்த மாரிமுத்து (31) ஆகிய 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதிவிசாரணை நடைபெற்றது. இதையொட்டி மணிகண்டன், சக்தி, மாரிமுத்து ஆகிய 3 பேரையும் போலீசார் பலத்த காவலுடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுத்தினர்.
இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையின் விவரம் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.
Related Tags :
Next Story