அறந்தாங்கி அருகே லாரி மீது பஸ் மோதல்; டிரைவர் பலி 16 பேர் காயம்


அறந்தாங்கி அருகே  லாரி மீது பஸ் மோதல்; டிரைவர் பலி 16 பேர் காயம்
x
தினத்தந்தி 26 April 2022 11:23 PM IST (Updated: 26 April 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே லாரி மீது பஸ் மோதியதில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

அறந்தாங்கி:
டிரைவர் பலி 
திருப்பூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு இன்று அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சங்கர் (வயது 52) என்பவர் ஓட்டினார். பஸ்சில் பயணிகள் பயணம் செய்தனர். அறந்தாங்கி அருகே குன்னக்குரும்பி கிராமம் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் வந்த போது, எதிரே அறந்தாங்கி நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு ஆலங்குடிக்கு சென்று கொண்டிருந்த லாரி மீது பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. 
இதில் லாரியை ஓட்டி வந்த எரிச்சியை சேர்ந்த டிரைவர் முகமது மகாதீர் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
16 பேர் காயம்
இதில் ஆலத்தூர் மீமிசலை சேர்ந்த ஜீவா (37), குளவாய்பட்டியை சேர்ந்த துர்கா (21), பஸ் டிரைவர் சங்கர் (52), பரமக்குடியை சேர்ந்த ஈஸ்வரன் (59), கீழையூர் ஐஸ்வர்யா (22), மகமாயி (60), மேலக்கோட்டையை சேர்ந்த சவுந்தர்யா (27), புதுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ் (34), அறந்தாங்கியை சேர்ந்த ரம்யா (21), அரவிந்த் (28), கீரமங்கலத்தை சேர்ந்த வசந்தகுமாரி (50), விஜயகாந்த் (37), ஆவுடையார்கோவிலை சேர்ந்த சினேகா (19), அறந்தாங்கியை சேர்ந்த ராஜலட்சுமி (35), வெங்கட்ராமன், ஆளப்பிறந்தானை ேசர்ந்த ராம்பிரதாப் (19) ஆகிய 16 பேர் காயமடைந்தனர்.  இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை  மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜீவா, துர்கா ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பஸ்சில் பயணம் செய்த 34 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
போக்குவரத்து பாதிப்பு 
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அறந்தாங்கி போலீசார் லாரி டிரைவர் முகமது மகாதீர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
அரசு பஸ் லாரி மீது மோதியதால் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story