விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரடாச்சேரி:-
100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். 60 வயது நிரம்பிய ஆண், பெண் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொரடாச்சேரி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், கதிர்வேல், கார்த்திகேயன், மாவட்ட துணைச் செயலாளர் ஜோசப் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story