காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு


காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 April 2022 11:29 PM IST (Updated: 26 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தர்மபுரி,:
நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று கல்லூரி செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அங்கு வந்த சிவாடி கிராமத்தை சேர்ந்த வாலிபர் சஞ்ஜய் (23) மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். தன்னை காதலிக்க மறுத்தால் எந்த நேரத்திலும் முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த மாணவி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story