தொப்பூரில் கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்
தொப்பூரில் கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:
தொப்பூரில் கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி கவிழ்ந்தது
கிருஷ்ணகிரியில் இருந்து கோவைக்கு கிரானைட் கற்கள் ஏற்றி கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் வழியாக நேற்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மேகநாதன் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் பர்கூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் தேவராஜ் (25), ஹரி (20), தினேஷ் (21), அண்ணாமலை (21) ஆகியோர் வந்தனர்.
தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை அருகே லாரி வந்தபோது தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த வணிக நிறுவன கடை சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கி தவித்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இ்துகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story