தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்பட்டால் புகார் புகார் தெரிவிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்பட்டால் புகார் தெரிவிக்க செல்போன் எண்களை அறிவித்து கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்பட்டால் புகார் தெரிவிக்க செல்போன் எண்களை அறிவித்து கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
தரமற்ற அரிசி
திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் தரமற்ற அரிசி மற்றும் பொருட்கள் வழங்கக்கூடாது. தரமற்ற அரிசி பெற்றால் அந்த அரிசியை உடனடியாக ரேஷன் கடைகளில் இருந்து அப்புறப்படுத்தி கிடங்குக்கு அனுப்பி வைக்க வேண்டும். கிடங்குகளில் உள்ள பொருட்கள் தரம் குறைந்ததாக காணப்பட்டால் அதை ரேஷன் கடைகளுக்கு அனுப்பக்கூடாது.
பயோமெட்ரிக் விற்பனை முனைய எந்திரத்தில் விரல் ரேகை பதிவாகவில்லை என்ற காரணத்தால் பொருட்களை வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது. ரேகை விழாதவர்களுக்கு 5 நிமிடம் இடைவெளி விட்டு மீண்டும் ரேகையை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகும் ரேகை பதிவாகவில்லை என்றால் பதிவேட்டை பராமரித்து பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
புகார் தெரிவிக்க செல்போன் எண்
மேலும் தரமற்ற அரிசி, கைரேகை பதிவு தொடர்பான புகார்களுக்கு அந்தந்த தனிதாசில்தார்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க செல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவுக்கு தனிதாசில்தார் ராசுவை 98651 28733 என்ற எண்ணிலும், தாராபுரம் தாலுகாவுக்கு தனிதாசில்தார் தேன்மொழியை 94898 12051 என்ற எண்ணிலும், காங்கயம் தாலுகாவுக்கு தனிதாசில்தார் ராஜேந்திர பூபதியை 97503 75660 என்ற எண்ணிலும், மடத்துக்குளம் தாலுகாவுக்கு தனிதாசில்தார் கவுரி சங்கரை 88380 76843 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பல்லடம் தாலுகாவுக்கு தனிதாசில்தார் சையது ராபியம்மாளை 86674 15669 என்ற எண்ணிலும், திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு குடிமைப்பொருள் தனிதாசில்தார் தங்கவேலை 94878 55557 என்ற எண்ணிலும், திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு தனிதாசில்தார் தினேஷ் ராகவனை 98424 16961 என்ற எண்ணிலும், உடுமலை தாலுகாவுக்கு தனிதாசில்தார் தயானந்தனை 99422 77555 என்ற எண்ணிலும், ஊத்துக்குளி தாலுகாவுக்கு தனிதாசில்தார் மாறனை 95243 22010 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story