வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2022 11:51 PM IST (Updated: 26 April 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றம், 
திருப்பரங்குன்றம் துர்கா காலனியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் கிரிவலப் பாதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர் தினேஷ்குமாரை வழிமறித்து மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 1000 மற்றும் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பறித்து தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசில் தினேஷ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.இந்த நிலையில் ஜே.ஜே. நகரை சேர்ந்த பழனிவேல் (வயது28), நிலையூரை சேர்ந்த நாகராஜ் (37) ஆகிய 2 பேரும் வழிப் பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து  வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story