காரைக்குடியில் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு
காரைக்குடியில் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழாவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.
காரைக்குடி,
காரைக்குடியில் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழாவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.
சார் பதிவாளர் அலுவலகம்
காரைக்குடி பைபாஸ் சாலையில் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். இதையடுத்து புதிய பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். விழாவில் காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துதுரை, துணைத்தலைவர் குணசேகரன், சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யாசெந்தில்நாதன், மாவட்ட கவுன்சிலர் ராதாபாலசுப்பிரமணியன், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், சூரக்குடி ஊராட்சி தலைவர் பொறியாளர் முருகப்பன், மதுரை பத்திர பதிவுத்துறை துணைப்பதிவாளர் ஜெகதீசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணன், மாவட்ட பதிவுத்துறை அலுவலர் லலிதா, உதவி பொறியாளர் முத்துஜெயம், நகர் மன்ற உறுப்பினர் அமுதா சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் தரைத்தளத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகம் நிலை-1, மாவட்ட பதிவாளர் அலுவலகம், பதிவறை அறை, கணினி அறை, ஆவண காப்பக அறை, கழிப்பிட வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் முதல் தளத்தில் இணை சார்பதிவாளர் நிலை-2 அலுவலகம், கணினி அறை, பதிவுரு அறை, கழிப்பிட அறை அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்
மேலும் இளையான்குடி ஒன்றியம் புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமை ஏற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாணவ-மாணவிகளுக்கு கண் கண்ணாடி, பொதுமக்களுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட இணை இயக்குனர் ராம் கணேஷ், வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ராஜரத்தினம், வட்டார தலைவர் மலைச்சாமி, தி.மு.க. நிர்வாகிகள் கருணாகரன், மலைமேகு, ஜான் போஸ்கோ, தனபால் கண்ணன் மலைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்ட பஸ் நிழற்குடையை கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story