தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்


தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 27 April 2022 12:04 AM IST (Updated: 27 April 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிச்சமணி தலைமை தாங்கினார்.

 கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். 

கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்து மடலை கிராம ஊராட்சி செயலாளர் முத்துக்குமரன் வாசித்தார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், கோட்டாட்சியர் பூங்கொடி, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், உதவி இயக்குனர் (தணிக்கை) ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மாலதி கணேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணா ஆறுமுகம், வேளாண்மை இயக்குனர் வேலாயுதம், வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, வாலாஜா தாசில்தார் ஆனந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான வாழ்வு, குழந்தை நேயம், குடிநீர் வசதி, சமூக பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம், அடிப்படை வசதிகள், பசுமையும், தூய்மையும், பாலின சமத்துவம், ஆகியவற்றை ஊராட்சி அடைய செயல்பட உள்ளது என பொதுமக்களுக்கு ஊராட்சி செயலாளர் தெரிவித்து அதற்கான உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் அர்ச்சனா, நன்றி கூறினார்.

Next Story