கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா


கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா
x
தினத்தந்தி 27 April 2022 12:04 AM IST (Updated: 27 April 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நடைபெற்றது.

சோளிங்கர்

ரரிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி பில்லாஞ்சி பகுதியில் அமைந்துள்ள கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நடைபெற்றது. 

திருவிழாவை முன்னிட்டு கங்கையம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், குங்குமம் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து, அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் எழுந்தருளி பெரிய தெரு, குளக்கரை வீதி, திடீர் நகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Next Story