லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 16 பேர் படுகாயம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வேனும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
பேரையூர்,
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வேனும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை மாற்றக்கோரி மதுரை, விருதுநகர், தென்காசி சாலை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மதுரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களும் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு வேன் ஒன்றில் 19 பேர், மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு திரும்பினர்.
அந்த வேன் நேற்று மதியம் 3 மணி அளவில் திருமங்கலம்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை வழியாக டி.கல்லுப்பட்டியை அடுத்த டி.குன்னத்தூர் அருகே சென்றபோது, எதிரே லாரி ஒன்று வந்தது. திடீரென லாரியும் வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 வாகனங்களும் நொறுங்கி ஒன்றுக்கொன்று சிக்கிக்கொண்டன. அவற்றில் இருந்தவர்கள் காயம் அடைந்து அலறினார்கள்.
தகவல் அறிந்து டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் பெருமாள் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு, காயம் அடைந்தவர்களை ஒவ்வொருவராக இடிபாடுகளில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
காயம் அடைந்தவர்கள்
அந்த லாரி தென்காசியில் இருந்து ஓசூர் செல்வதற்காக வந்துள்ளது. லாரி டிரைவரான தர்மபுரி மாவட்டம் ஆல்மார்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 32), இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேனில் வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (64), பாலசுப்பிரமணி (45), வீரபாண்டி (42), குருசாமி (37), பழனிசாமி (53), மாடசாமி (30), முருகன் (54), சந்தன குமார் (34), இசக்கிமுத்து (32), மாயக்கண்ணன் (37), வேன் டிரைவர் வீரபாண்டி (31), ஸ்ரீராம் (27), பழனிசெல்வம் (41), முருகன் (52), மதுசூதனன் (43) ஆகியோர் படுகாயம் அடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story