மாவட்டத்தில் 3 மாதங்களில் 24 கர்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்சிலேயே பிரசவம்-மண்டல மேலாளர் தகவல்


மாவட்டத்தில் 3 மாதங்களில் 24 கர்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்சிலேயே பிரசவம்-மண்டல மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 27 April 2022 12:11 AM IST (Updated: 27 April 2022 12:11 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 3 மாதங்களில் 24 கர்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

நாமக்கல்:
108 ஆம்புலன்ஸ் சேவையின் சேலம் மண்டல மேலாளர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் அவசர சேவையில் தற்போது தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் இருபத்தி ஏழு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகிறது. சாலை விபத்து, நெஞ்சுவலி, விஷ பூச்சிகள் கடித்தல், தற்கொலை முயற்சி, பிரசவம் போன்ற பல்வேறு அவசர சேவைக்கு இந்த வாகனங்கள் பயன்பட்டு வருகின்றன.
இதில் ஜனவரி மாதம் 13 கர்ப்பிணிகளுக்கும், பிப்ரவரி மாதம் 7 கர்ப்பிணிகளுக்கும், மார்ச் மாதம் 4 கர்ப்பிணிகளுக்கும் என கடந்த 3 மாதங்களில் 24 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவங்கள் பார்க்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story