அன்னவாசல் அருகே 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை
அன்னவாசல் அருகே 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
அன்னவாசல்:
தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் பொதிகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்தானசெல்வி (வயது 39). இவர் தனது கணவர் வசந்த்குமாருடன் அன்னவாசல் அருகே உள்ள மன்னார்காடு பகுதியில் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சந்தானசெல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இ்டத்திற்கு விரைந்து வந்து சந்தானசெல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story