போலீஸ் இன்ஸ்பெக்டர் வாகனம் மீது லாரி மோதியதால் பரபரப்பு


போலீஸ் இன்ஸ்பெக்டர் வாகனம் மீது லாரி மோதியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 April 2022 12:15 AM IST (Updated: 27 April 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாகனம் மீது லாரி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர், 
விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா. இவர் தனது வாகனத்தில் இரவு ரோந்து சென்றார். அப்போது மதுரை ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி, இன்ஸ்பெக்டர் வாகனம் மீது மோதியதில் அந்த வாகனம் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. இதுபற்றி இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் நடவடிக்கை எடுத்து, லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் பொன்னன்குறிச்சியை சேர்ந்த சுடலைகண்ணன் (வயது 38) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story