வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம்


வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 27 April 2022 12:19 AM IST (Updated: 27 April 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 29-ந் தேதி சிவகங்கையில் நடக்கிறது

சிவகங்கை 
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன்படி வருகிற 29-ந்தேதி காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்வார்கள். எனவே வேலை தேடுபவர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த முகாமில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவர்களுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்படுகிறது. எனவே, விருப்பமுள்ள பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது. இம்முகாமல் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டு பயன்பெறலாம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story