நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் வக்கீல்கள் சேமநல நிதியை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தியமைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிப்பது. சுப்ரீம் கோர்ட்டு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் வக்கீல் செல்வம், முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், மாவட்ட துணை செயலாளர் விமலா சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இளம்பரிதி, காந்தி, நாமக்கல் நகர பொறுப்பாளர்கள் சிவக்குமார், ராணா ஆனந்த், பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story