பரமத்தி, கபிலர்மலையில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம்


பரமத்தி, கபிலர்மலையில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம்
x
தினத்தந்தி 27 April 2022 12:21 AM IST (Updated: 27 April 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி, கபிலர்மலையில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் நடக்கிறது.

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர், கபிலர்மலையில் ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த பயனாளிகள் வருகிற 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை தங்களது வங்கி கணக்கில் இணைக்க வேண்டும். இல்லையேல் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டம் நிறுத்தப்படும். பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பொது சேவை மைய முகவர்களால்  முகாம் நடத்தப்படுகிறது. இதேபோல் கபிலர்மலை சமுதாய கூடத்தில் இன்று வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க முகாம் நடக்கிறது. முகாம்களில் பரமத்தி, கபிலர்மலை வட்டார விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி, கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளனர்.

Next Story