சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் 3 கிராமங்களுக்கு தலா ரூ.10 லட்சம்-துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் 3 கிராமங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் சார்பில் சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டியில் அனைத்து சமூக மக்களின் நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் அருள் ராஜேஷ் தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், எஸ்.சி., எஸ்.டி. வழக்குப்பதிவு செய்யப்படாமல் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் 3 கிராமங்களை தத்தெடுத்து, அவற்றுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த பணத்தின் மூலம் பள்ளிக்கூடமோ, நூலகமோ அல்லது பொது கழிப்பிட வசதியோ ஏற்படுத்தி கொள்ளலாம். பரிசு வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்வார். எனவே முத்துகாப்பட்டி பகுதியில் தீண்டாமை சம்பந்தமாக எந்த ஒரு வழக்கும் இல்லாமல் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story