திருப்பத்தூரில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருப்பத்தூர் மின்சார மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுக்குழு தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஞானசேகரன், ரங்கநாதன், சி.ஐ.டி.யு. சிவசீலன், ஜோதி, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும், மின்சார வாரியத்தில் புதிய பதவிகளை அனுமதிக்கக் கூடாது, ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின் இணைப்பு எண்ணிக்கை, வட்டம் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேசி தீர்வு காண வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story