அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.19 லட்சம் மோசடி
ஆம்பூர் அருகே அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.19 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சாத்தம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த சிலர் திருப்பத்தூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
அதில் சாத்தம்பாக்கத்தை அடுத்த பாவர்தம்பட்டறை பகுதியை சேர்ந்த 2 பேர் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கூறி வந்தனர்.
இதனை நம்பி 20-க்கும் மேற்பட்டோர் அவர்களிடம் பணம் கொடுத்தோம். ரூ.19 லட்சம் வரை கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் கூறியபடி யாருக்கும் அரசு வேலை வாங்கித் தரவில்லை.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருப்பத்தூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், உமராபாத் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் யுவராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story