அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு டாக்டரின் தம்பி தற்கொலை


அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு டாக்டரின் தம்பி தற்கொலை
x
தினத்தந்தி 27 April 2022 12:36 AM IST (Updated: 27 April 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு டாக்டரின் தம்பி தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). இவர் ஆரணி புது மசூதி தெருவில் உள்ள இவரது அண்ணன் நக்கீரன் மருத்துவமனையில் மருந்து கடை நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து கடையை விட்டு விட்டு, அதே மருத்துவமனையில் உள்ள மருந்து கடையில் மருந்தாளராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது அண்ணன் டாக்டர் நக்கீரன் வீட்டுக்குச் சென்றதும், பாஸ்கர் மருந்து கடையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் கதவில் எட்டி உதைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் படை வீரர்கள் சென்று கேட்டை உடைத்து பாஸ்கரை உயிருடன் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

Next Story