தினத்தந்தி புகார்பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டி
அடிப்படை வசதிகள் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.மீனாட்சிபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு செல்ல சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மழைக்காலத்தில் இங்குள்ள சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் அங்கன்வாடியை சுற்றி முட்புதர்கள் இருப்பதால் மழை காலங்களில் விஷ பூச்சிகள் அங்கன்வாடி மையத்திற்குள் வரும் நிலை உள்ளது. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து மையத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேகத்தடை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சாலையில் சிலர் அதிக வேகத்தில் வாகனங்களில் செல்கின்றனர். அதிக வேகத்தில் வரும் வாகனங்களால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றது. எனவே மேற்கண்ட சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரில் பள்ளிக்கூடம் அருகில் உள்ள சாலையின் ஓரத்தில் 2 மரங்கள் ஆபத்தான நிலையில் பட்டுப்போய் உள்ளன. போக்குவரத்து நெரிசல் மிக்க இப்பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயணம் செய்கின்றனர். எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ள இந்த மரங்களினால் விபத்து அபாயம் உள்ளது. எனவே பட்டுப்போன மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story