திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாகா கமிட்டி விசாரணை
பெண் போலீஸ் ஏட்டுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள திருத்தங்கல் போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டரிடம் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.
விருதுநகர்,
பெண் போலீஸ் ஏட்டுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள திருத்தங்கல் போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டரிடம் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.
போலீஸ் இன்ஸ்பெக்டர்
திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த முத்து பாண்டியன் அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் அவரை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் முத்து பாண்டியனிடம் விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா தலைமையிலான விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.
கமிட்டி அறிக்கை
இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிவடைந்த நிலையில் விசாகா கமிட்டியின் அறிக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலமாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்து பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story