கோவில் அருகில் இருந்த மீன்கடை அகற்றம்
கோவில் அருகில் இருந்த மீன்கடை அகற்றம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் பகுதியில் அழகுநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாக பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீன்வளத்துறையின் சார்பில் திடீரென்று மீன்கடை அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தின் தலைவர் குப்புச்சாமி மற்றும் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். கோவில் அருகில் மீன்கடை அமைத்துள்ளது மனவேதனை அடையச்செய்துள்ளது. உடனடியாக இந்த கடையை அகற்ற வேண்டும் என்றனர். இதன்பின்னரும் மீன்கடை அகற்றப்படாத நிலையில் ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நேற்று கோவில் பகுதியில் மீன்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவோடு இரவாக அந்த மீன்கடை மீன்வளத்துறையின் சார்பில் அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story