திருவிழா நடத்த உரிமை கேட்டு உண்ணாவிரதம்


திருவிழா நடத்த உரிமை கேட்டு உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 27 April 2022 1:19 AM IST (Updated: 27 April 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

செருவாவிடுதி பகுதி கேவில்களில் திருவிழா நடத்த உரிமை கேட்டு உண்ணாவிரதம் நடந்தது. இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருச்சிற்றம்பலம்;
செருவாவிடுதி பகுதி கேவில்களில் திருவிழா நடத்த உரிமை கேட்டு உண்ணாவிரதம் நடந்தது. இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். 
திருவிழா 
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே செருவாவிடுதி தெற்கு கிராமம் உள்ளது. இங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காட்டில் வன நாயகியாகத் திகழும் போத்தி அம்மன் கோவில் உள்ளது. இதே கிராமத்தில் மாரியம்மன், அய்யனார் கோவில்களும் உள்ளன. இந்த 3 கோவில்களிலும் அனைத்து தரப்பு சமுதாய பிரிவினரும் ஒருங்கினைந்து 3 நாட்கள்  பொது திருவிழாவாக கடந்த 2003-ம் ஆண்டு வரை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 
 தற்போது போத்தி அம்மன், மாரியம்மன், அய்யனார் ஆகிய 3 கோவில்களையும் தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் வசம் கொண்டு வரவேண்டும்  ஆதிதிராவிடர் இன மக்கள் திருவிழா நடத்துவதற்கு உரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  செருவாவிடுதி வடக்கு மற்றும் செருவாவிடுதி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பஸ் நிறுத்த வளாகத்தில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 
சமாதான பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பிரபாகர், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமல கண்ணன், தாசில்தார் கணேஷ்வரன், திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதில் 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பேரில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

Next Story