வடசேரி பஸ் நிலையத்தில் பரபரப்பு: காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை முயற்சி
காதல் திருமணம் செய்த தம்பதி நாகர்கோவில் பஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்,
காதல் திருமணம் செய்த தம்பதி நாகர்கோவில் பஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தற்கொலை முயற்சி
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நெல்லை பஸ்கள் நிற்கும் பிளாட்பாரத்தில் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சிவன்கோவில் 7-வது தெருவை சேர்ந்த அஜித் குமார் (வயது 22) மற்றும் பிரீத்தி (20) என்பது தெரியவந்தது. .
காதலுக்கு எதிர்ப்பு
இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, "அஜித்குமாரும், பிரீத்தியும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 2 பேரும் கடந்த 4-ந்தேதி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் 2 பேரும் கன்னியாகுமரிக்கு வந்து, லாட்ஜில் தங்கி உள்ளனர். எங்கு செல்வது என தெரியாமல் நாகர்கோவில் வந்த இருவரும் வடசேரி பஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்துள்ளனர். இதுகுறித்து 2 பேரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வந்ததும் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும்" என்றனர்.
இந்த சம்பவம் பற்றி வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ் நிலையத்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story