குமரியில் பிளஸ்-2 தேர்வை 23,272 மாணவர்கள் எழுதுகிறார்கள்
குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 23 ஆயிரத்து 272 மாணவர்கள் எழுதுகிறார்கள்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 23 ஆயிரத்து 272 மாணவர்கள் எழுதுகிறார்கள்.
பிளஸ்-2 தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது பிளஸ்-1 தேர்வுகள் 9-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையும், 10-ம் வகுப்புக்கான தேர்வுகள் 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரையும் நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை மற்றும் திருவட்டார் கல்வி மாவட்டங்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 11 ஆயிரத்து 216 மாணவர்களும், 12 ஆயிரத்து 56 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 272 பேர் எழுதுகின்றனர். இதே போல பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 584 மாணவர்களும், 11 ஆயிரத்து 805 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 389 பேர் எழுதுகின்றனர். மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 697 மாணவர்களும், 11 ஆயிரத்து 587 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 284 பேர் எழுத உள்ளனர்.
துணை இயக்குனர் நியமனம்
பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை மேற்பார்வையிட பள்ளி கல்வித்துறை இயக்கங்களை சேர்ந்த இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் குமரி மாவட்டத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனர் அனிதா நியமிக்கப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story