குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 27 April 2022 1:36 AM IST (Updated: 27 April 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை டவுனை சேர்ந்தவர் சபரிஸ்ரீ கண்ணன் (வயது 36). நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் ஜெயராமன் (22). இவர்கள் டவுன் மற்றும் தச்சநல்லூர் பகுதியில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.

இதையொட்டி 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று டவுன் மற்றும் தச்சநல்லூர் போலீசார், 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story