மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலி


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 27 April 2022 1:55 AM IST (Updated: 27 April 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
எலக்ட்ரீசியன்
ஒரத்தநாட்டை அடுத்துள்ள கண்ணந்தங்குடி மேலையூர் செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்த சிங்காரவேல். இவருடைய மகன் ராஜேஷ்குமார்(வயது23). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் இரவு வன்னிப்பட்டு பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவில் கலந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மன்னார்குடி- ஒரத்தநாடு சாலையில் செட்டி மண்டபம் அருகில் உள்ள மீன் பண்ணை அருகே வந்த போது ராஜேஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதியது. 
பரிதாப சாவு
இதில் படுகாயமடைந்த ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் ராஜேஷ் குமாரின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story