தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல்


தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல்
x
தினத்தந்தி 27 April 2022 2:19 AM IST (Updated: 27 April 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் நகராட்சி வார்டு தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது.

தாரமங்கலம்:-
தாரமங்கலம் நகராட்சி 27 வார்டுகளுக்கான தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்புமனு வினியோகம் தாரமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மேற்கு மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ராஜவேலு ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் வேட்புமனுக்களை தேர்தல் பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோரிடம் வழங்கினர். இதில் பேரூர் செயலாளர் குப்பு என்கிற குணசேகரன், பொருளாளர் சேகரன், துணை செயலாளர் புவனேஸ்வரி துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story