வலசையூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் வலசையூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம்:-
சேலம் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில், வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளனர். கண்பார்வையற்றோர் பிரிவில் மாணவர் சுந்தரமூர்த்தி குண்டு எறிதல் போட்டியில் 2-வது இடம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-வது இடம் பெற்று சாதனை படைத்தார். மேலும் அதே பிரிவில் 12-ம் வகுப்பு மாணவர் சிரஞ்சீவி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். காது கேளாதோர் பிரிவுக்கான போட்டிகளில் பிரேம்குமார், குண்டு எறிதலில் முதல் இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் 2-வது இடமும் பிடித்தார். மேலும் மாணவர்கள் பிரவீன்குமார், ராஜா ஆகியோர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பிடித்த 2 மாணவர்கள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலேந்திரன், சிறப்பு ஆசிரியர் அமிர்தவல்லி, உடற்கல்வி ஆசிரியர்கள் யோகநாதன், ஸ்டாலின், அன்பன் டேனியல் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு பாராட்டினர்.
Related Tags :
Next Story